உள்ளம் எனும் காட்டினிலே உள்ளது என்ன...-அதன்
உள்நுழைந்து தேடியும் நான் கண்டது என்ன
கொள்ளை அழகே மனமே என்று வியந்தேன்-பின்
இல்லை அது முட்பாதை என்று பயந்தேன்.
நதிமீதில் பூப்போல மிதக்கும் ஒருநாள்
நாணல்போல் தலைசாய்த்துக் கிடக்கும் மறுநாள்
இதுபோதும் இதுபோதும் எனக் கூத்தாடும்-பின்
ஏனிந்த வாழ்வென்று தன்னைச் சாடும்....!
அன்பொன்றே உலகாளும் என்றே பாடும்
அரிதார முகம் என்று கதவை மூடும்
உறவென்று கைநீட்டி ஓடிப்போகும்-பொய்
உலகென்று தனிமைக்குள் வாடிச்சாகும்...!
தேடல்கள் முடியாது என்றே தெரியும்
தேடுவதை நிறுத்திவிட யாரால் முடியும்
கானல் நீர் மான்வேட்கை போல வாழ்க்கை-இது
புரிந்தாலும் அணையாது உயிர்மேல் ஆசை...!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
just checking
Post a Comment